முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து குவிப்பு வழக்கில் செ.ம.வேலுச்சாமி விடுதலை

புதன்கிழமை, 29 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

கோவை,ஜூன். 29 - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது. கடந்த 2001 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது செ.ம. வேலுச்சாமி அ.தி.மு.க. மந்திரி சபையில் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி பானுமதி மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவை குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சீனிவாசன் செ.ம. வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் சரியான முகாந்திரம் இல்லாததால் இருவரையும் நிரபராதி என்று விடுதலை செய்து தீர்ப்பளித்தார். செ.ம. வேலுச்சாமி சார்பில் வக்கீல் ஆறுமுகம், நாகராஜ், அமலநாதன், சிக்கந்தர் பாட்சா, சந்திரசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமிக்கு ஏராளமான அ.தி.மு.க பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்