முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளிதழ் எரிக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐக்கு அனுமதி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.30 - மதுரையில் நாளிதழ் எரிக்கப்பட்டு 3 பேர் இறந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய சிபிஐக்கு மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டது.  தி.மு.கவில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள், மு.க.அழகிரி ஆதரவாளர்கள் என எப்போதுமே இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது இந்த இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும். அப்போது கட்சியின் தலைவர் கருணாநிதி தலையிட்டு சமாதானம் செய்து வைப்பது வழக்கம். திமுக ஆட்சியில் இருந்த போதே அழகிரி மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் அழகிரியின் ஆதரவாளர்கள் பஸ்களை எரித்தனர். மு.க.ஸ்டாலின் -மு.க.அழகிரிடையே இப்படி மோதல்கள் ஏற்பட்டிருக்கொண்டிருந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு மே 9 ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய உறவினர் நடத்தும் ஒரு நாளிதழில் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், மு.க.அழகிரிக்கு மிகக்குறைந்த அளவே ஆதரவு இருப்பதாகவும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் உள்ள அந்த நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்கினர்.

    முதலில் வந்த திமுகவினர் கற்களாலும், கட்டைகளாலும் அலுவலகம் முழுவதையும் சேதப்படுத்தினர். இதன் பிறகு வந்த திமுகவை சேர்ந்த அட்டாக் பாண்டி தலைமையில் வந்த ஒரு கும்பல் அலுவலகத்தை தீவைத்து எரித்ததாக கூறப்பட்டது. இதில் அலுவலகம் முழுவதும் எரிந்து நாசமானதுடன் அலுலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் வினோத், கோபி, முத்துராமலிங்கம் ஆகிய 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ போலீசார் அட்டாக்பாண்டி, திருச்செல்வம், பிரபு, சரவணமுத்து, முருகன், விஜயபாண்டி, கந்தசாமி,ரமேஷ்பாண்டி, வழிவிட்டான், ஆய்முத்து, சுதாகர், ரமேஷ்குமார், மற்றொரு முருகன், மாலிக்பாட்ஷா, ரூபன், போலீஸ் டிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை முதன்மை செசன்சு நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கடந்த 9.12.2009ம் தேதி அன்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.

  இதை தொடந்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ மதுரை செசன்சு கோர்ட் தீர்ப்பை எதிர்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் மேல் முறையீடு செய்யாததால்,  அதற்கான காரணத்தை குறிப்பிட்டு மேல் முறையீடு செய்ய அனுமதி கேட்டு கடந்த 7.7.2010 அன்று  மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தது.  இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் நேற்று நீதிபதிகள் ராஜேஸ்வரன், அக்பர் அலி ஆகியோர் சிபிஐக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து நாளிதழ் எரிக்கப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்யும் பணியில் சிபிஐ தீவிரமாக ஈடுபடத்தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago