முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன்: அரையிறுதியில் ஷரபோவா - விக்டோரியா

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 30 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவி ன் காலிறுதிச் சுற்றில் ரஷ்ய நட்சத்திர வீராங்கனையான மரியா ஷர போவா, விக்டோரியா, லிசிகி , மற்றும் குவிட்டோவா ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்ட ன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனி ல் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இதற்காக அவ ர்கள் தீவிரப் பயிற்சியுடன் ஆயத்தமாக வந்துள்ளனர். 

கடந்த 2 வார காலமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டி தற்போ து அரை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் கால் இறுதிச் சுற்று ஒன்று நடந்தது. இதில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவும், ஆஸ்தி ரிய வீராங்கனை தமிராவும் மோதினார்கள். 

இதில் விக்டோரியா 6 - 3, 6 - 1 என்ற நேர் செட் கணக்கில் தமிராவை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தார். 5 -வது ஆண்டாக விளை யாடும் அவர் விம்பிள்டன் அரை இறுதிக்கு தகுதி  பெறுவது இதுவே முதன் முறையாகும். 

மற்றொரு கால் இறுதி ஒன்றில் செக். குடியரசு வீராங்கனை குவிட்டோவாவும், பெல்ஜியம் வீராங்கனை பிரன்கோவாவும் மோதினர். இதில் 8 -ம் நிலை வீராங்கனையான குவிட்டோவா 6- 3, 6 - 7 (7), 6 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

இதே போல ரஷ்ய முன்னணி வீராங்கனையும், 5 -ம் நிலை வீராங்க னையுமான மரியா ஷரபோவா, ஜெர்மனியைச் சேர்ந்த புதுமுக வீரா ங்கனை லிசிகி ஆகியோரும் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதியில், ரஷ்ய வீராங்க னை ஷரபோவா ஜெர்மனி வீராங்கனை லிசிகியுடன் மோதுகிறார். பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா, செக். குடியரசு வீராங்கனை குவிட்டோவாவுடன் மோதுகிறார். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் கால் இறுதிச் சுற்றுக்கு முதல் நிலை வீரரான ரபேல் நடால், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், இங்கி லாந்து வீரர் ஆன்டி முர்ரே, செர்பிய வீரர் ஜோகோவிக், அமெரிக்க வீரர் மர்டி பிஷ், பிரான்ஸ் வீரர் டிசோன்சா, ஸ்பெயின் வீரர் லோபஸ் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் டோமிக் ஆகியோர் தகுதி பெற்று உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago