முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் விவகாரத்தில் பிரதமர் கட்டுப்படுத்தப் படுகிறார்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புனே,ஜூன்.30 - லோக்பால் மசோதா விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார் என்று அண்ணா ஹசாரே குற்றஞ்சாட்டியுள்ளார். 

லோக்பால் மசோதா வரைவு மசோதா தயாரிப்பு கமிட்டியில் சிவில் உறுப்பினராக அண்ணா ஹசாரே இருக்கிறார். லோக்பால் மசோதாவிற்குள் பிரதமரையும் உள்ளடக்க வேண்டும் என்று இவர் கூறி வருகிறார். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதுகுறித்து புனே நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அண்ணா ஹசாரே, லோக்பால் மசோதா விவகாரத்தில் பிரதமமையும் உள்ளடக்க வேண்டும் என்ற விஷயத்தில் மன்மோகன் சிங் மவுனம் சாதித்து வருகிறார். இதற்கு காரணம் பிரதமர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார் என்பதுதான் என்றார். 

லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர் வர மன்மோகன் சிங் பயப்படுவதாக தெரியவில்லை. ஆனால் அவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார். லோக்பால் மசோதாவிற்கு கீழ் வர ஏன் நீங்கள் விரும்பவில்லை என்று நான் அவருக்கு ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு மன்மோகன் சிங் பதில் கடிதம் எழுதவில்லை. பின்னர் மன்மோகன் சிங்கை நான் நேராக சந்தித்து பேசினேன். அப்போதும் இதே கேள்வியை நான் திரும்பக்கேட்டேன். அப்போதும் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல் மவுனமாக இருந்தார் என்று ஹசாரே கூறினார். லோக்பால் மசோதாவில் பிரதமர், அரசு அதிகாரிகள், சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு கமிஷனர் ஆகியோர்களையும் சேர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் சமாதானத்திற்கு இடம் கொடுக்கவே மாட்டேன் என்றும் ஹசாரே கூறினார். 

என் மீது காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளால் பிரசாரம் செய்து வருவதை கண்டிக்கும்படி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு சோனியா பதில் கடிதம் எழுதியோடு அதை பத்திரிகைகளுக்கும் கொடுத்ததில் எந்தவித தவறும் இல்லை என்றும் ஹசாரே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago