முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.30 - லோக்பால் வரைவு மசோதா விவகாரத்தில் தலையிட சுப்ரீம்கோர்ட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நாட்டில் ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை ஒழிக்க லோக்பால் மசோதா வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான வரைவு மசோதாவை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இதில் 5 பேர் அரசு பிரதிநிதிகளும் மீதி 5 பேர் சமூக ஆர்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பதில் அரசு பிரதிநிதிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டை போக்கி ஒருமித்த கருத்தை உருவாக்க 9 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. லோக்பால் மசோதாவுக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்கள் ஆகியோர்களையும் உள்ளடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். இதற்கு அரசு பிரதிநிதிகள் மறுத்து வருகிறார்கள். 

இந்தநிலையில் லோக்பால் மசோதாவை வரைவு செய்வதில் சமூக ஆர்வலர்கள் இடம்பெற்றிருப்பதை தடை செய்யக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது சட்டம் பாராளுமன்றத்தில்தான் இயற்றப்பட வேண்டும். சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்குத்தான் அதிகாரம் உள்ளது. லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பதில் அண்ணாஹசாரே தலைமையிலான சிவில் உறுப்பினர்கள் ஈடுபடுவதை அனுமதிக்காமல் தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவானது நேற்று விடுமுறைகால நீதிபதிகள் பி.சதாசிவம்,ஏ.கே. பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது னுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே லோக்பால் மசோதா விவகாரத்தில் தலையிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்