முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி: சீமான்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.30 - காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறை தொடர்ந்து தமிழர் விரோத போக்குடன் இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என இயக்குநர் சீமான் எச்சரித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அரசுக் குழு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு எந்த நிர்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவுடனான சந்திப்புக்கு பிறகு கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் இலங்கை பிரச்சினையில் தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை விரைவாக உருவாக்க வேண்டும் என்று கூறியதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் கொழும்பில் இருந்து வெளியாகும் செய்திகள், இதற்கு நேர் முரணாக உள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு எப்படிப்பட்ட ஏமாற்று நாடகத்தை நடத்தி வருகிறது என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கைத் தமிழர் பிரச்சினையை மற்ற மாநில முதல்வர்களிடம் கொண்டு சென்று மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். நேற்றைய தினம் கூட சிங்க மீனவர்கள் தமிழக மீனவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி வலைகளை அறுத்து உள்ளனர். மீனவர்களுக்கிடையே மோதலை உருவாக்கி பிரச்சினையை திசை திருப்ப இலங்கை அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசு கடைபிடித்து வரும் இலங்கை ஆதரவு கொள்கையே இதற்கு காரணம். சட்டப்பேரவை தேர்தல் தோல்வியில் இருந்தே காங்கிரஸ் பாடம் கற்றதாக தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறை தொடர்ந்து தமிழர் விரோத போக்குடன் இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சி படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago