முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் முயற்சியால் மீனவர்கள் 23 பேரும் விடுதலை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

ராமேஸ்வரம்,ஜூன்.30 - இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக ராமேஸ்வரம், நாகைப்பகுதி மீனவர்கள் பிழைப்பாக கடலில் மீன்பிடிக்க செல்கிறார்கள். இப்படி பிழைக்காக மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பெரும் கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தவது, துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை பறிமுதல் செய்வது,கடத்திச்சென்று சிறையில் அடைப்பது போன்ற ஈவு இரக்கமற்ற செயல்களில் சிங்கள கடற்படையினர் ஈடுபட்டு வந்தனர். 

கடந்த 20-ம் தேதி அன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் 5 படகுகளில் மீன்பிடி கருவிகளுடன் மீன்பிடிக்கச்சென்றனர். அவர்களை சிங்கள கடற்படையினர் சுற்றிவளைத்து தாக்கி பிடித்துச்சென்றுவிட்டனர். அவர்களை அனுராதபுரம் சிறையில் அடைக்கச் செய்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுன் இந்த 23 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டார். இதனையொட்டி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையொட்டி அந்த 23 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. இதனையொட்டி அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த 23 மீனவர்களும் நேற்று தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த மீனவர்களை விடுவிப்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லையா என்று நீதிபதி இலங்கை அரசு வழக்கறிஞரை பார்த்து கேட்டார். அதற்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று வழக்கறிஞர் பதில் அளித்தார். இதனையொட்டி அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 23 மீனவர்களையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் சிங்கள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் சிங்கள கடற்படையினரிடம் இன்று அந்த 23 மீனவர்களும் ஒப்படைக்கப்படுகிறார்கள். இந்திய கடற்படையினர்களிடம் இந்த 23  மீனவர்களும் 5 படகுகளும் ஒப்படைக்கப்பட்டு இன்று மாலையோ அல்லது இரவோ ராமேஸ்வரம் திரும்பலாம் என்று நிரபராதி மீனவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு தலைவர் யு. அருளானந்தம் நேற்று ராமேஸ்வரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்