முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரி மனைவி தற்கொலை: தி.மு.க. பிரமுகர் கைது

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.1 - சேலத்தில் நில அபகரிப்பால் கடந்த 2 வருடங்களுக்கு முன் டெலிபோன்துறை அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.கிளைச்செயலாளர் சிவகுமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த தி.மு.க.ஆட்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் முதல் கிளை செயலாளர் வரை தங்களது அதிகாரத்திற்கு உட்பட்டு பல்வேறு இடங்களில் நிலங்களை ஆக்கிரமித்தும், ஏழை மற்றும் அப்பாவிகளிடம் நிலங்களை அபகரிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தால் போலீசார் அந்த புகார்களை கண்டு கொள்ளாமல் புகார் கொடுத்தவரையே மிரட்டிய சம்பவங்களும், போலீசாரே கட்டை பஞ்சாயத்து நடத்திய சம்பவங்களும் நடந்தன. அதையும் மீறி சிலர் கோட்டில் சென்று நியாயம் பெற்றாலம் கோர்ட்டின் உத்தரவை அமுல்படுத்த வேண்டியது போலீசார் என்பதால் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாகவே பல சம்பவங்கள் கிடந்தன.

இந்த நிலையில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்தது. அவர் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிபடி நில அபகரிப்பில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து நிலங்கள் மீட்டு தரப்படும் என்று சொன்னார். அதன்படி நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த தனிப்படை போலீசார் அவர்களுக்கு வரும் புகார்கள் மீது தற்போது எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். 

நில அபகரிப்பு பிரச்சனைகளில் சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வினரால் அதிகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான சுரேஷ்குமார் நிலபிரச்சனையில் ஏற்பட்ட ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ்  மற்றும் குடும்பத்தினர் 6 பேர் கொலை வழக்கில் தி.மு.க.ஆட்சியிலேயே கைது செய்யப்பட்டார்.தற்போது அந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. 

தற்போது சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் நில அபகரிப்பில் ஈடுப்பட்ட தி.மு.க.வினர்.மீது புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது. சேலம் மாநகரில் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 2 தி.மு.க.வினர் நில அபகரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்ட போலீசாரால் சேலம் மாநகர தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோமாணிக்கம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ள அய்யந்திருமாளிகைச் சேர்ந்த டெலிபோன்துறை அதிகாரி ராஜசேகரின் மனைவி மாதேஸ்வரி 2009 ல் தன்னுடைய நிலத்தை சேலம் சிவதாபுரம் தி.மு.க.வார்டு கிளைச் செயலாளர் சிவகுமார் என்பவர் போலி ஆவணம் தயாரித்து போலி கையெழுத்து போட்டும் தனது அபகரித்துக் கொண்டார் என புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரின் மீது போலீசார் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.இதில் மனமுடைந்த மாதேஸ்வரி கடந்த 2009 ல் தனக்கு நியாயம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது சாவிற்கு சிவக்குமார்தான் என்று எழுதியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க.ஆட்சியில் நில மோசடி புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் மீண்டும் இது குறித்து புகார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் சிவக்குமாரை நேற்று முன் தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சேலம் மாவட்ட தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள்,பொதுமக்களிடையே மிகுந்த சந்தோஷத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்