முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலைத் தடுப்பதில் பிரதமர் தோல்வி: கட்காரி

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 1 - ஊழலைத் தடுப்பதிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதிலும் பொருளாதார வல்லுனரான பிரதமர் மன்மோகன்சிங் தோற்றுவிட்டார் என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது கட்காரி தெரிவிக்கையில், ஊழலைத் தடுப்பதிலும், சாமானிய மக்களை பாடாய் படுத்திவரும் விலைவாசி உயர்வு பிரச்சனைகளிலும் தனது தோல்வியை நேர்மையாக ஏற்றுக்கொள்ளாமல் அதனை மறுத்து வாக்குவாதம் செய்துவருகிறார். நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே முழுக் காரணம். இதை யாரும் மறுக்க முடியாது. 2009 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. ஆட்சியைப் பிடித்தபின்னர் பிரதமர் இருக்கையில் அமர்ந்த மன்மோகன்சிங் இன்னும் 100 நாட்களில் விலை உயர்வு கட்டுக்குள் வந்துவிடும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை விலைவாசி உயர்வு கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் பிரதமர், இந்தியாவில் மட்டும் விலைவாசி உயரவில்லை. உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்தே வருகிறது என்று மாற்றிப் பேசுகிறார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தன்னிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கிறார். முக்கியமான பொறுப்பில் உள்ளவர் இப்படி மாற்றி மாற்றி பேசலாமா? விலைவாசி உயர்வு, ஊழலை தடுப்பதில் பிரதமர் தோல்வியைத் தழுவிவிட்டார். இதை அவர் துணிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசு உணவுக் கிடங்கில் 70,000 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் மக்கி வீணடிக்கப்படுகின்றன. மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்று எப்போதும் பிரதமர் மன்மோகன்சிங் எப்போதும் கூறுகிறார். பிரதமரின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. மத்திய அரசுக்குத்தான் எதிர்க்கட்சிகளை மதிக்கத் தெரியவில்லை. லோக்பால் விஷயத்தில் பாரதிய ஜனதாவை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இந்த மசோதாவை வடிவமைக்கும் விஷயத்தில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்துத்தான் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago