முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஜூலை.1 - திருப்பரங்குன்றம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டமன்ற அறையில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் காந்திமதி(தி.மு.க) தலைமை வகித்தார். துணைத் தலைவர் அக்னிராஜ்(தி.மு.க) முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துக்குமார், சந்திரன், மணிகண்டன், ஞானவேல், சுமதி, பாண்டிசெல்வி ஆகியோர் எழுந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானதற்கு நன்றி தெரிவித்தும், ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் 20 கிலோ இலவச அரிசி, தாலிக்கு இலவச தங்கம், முதியோர்கள் உதவிகளுக்கு உதவித் தொகை உயர்வு ஆகிய தமிழக அரசின் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்தனர். நகராட்சி தி.மு.க. தலைவர் காந்திமதி  மற்றும் துணைத் தலைவர் அக்னிராஜ், தி.மு.க. கவுன்சிலர்கள் அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பேசுகையில், 

திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள 9 கடைகள் கொண்ட வணிக வளாகம் 1998 ல் கட்டப்பட்டது. அப்போது அந்த கடைகள் முறையாக ஏலம் விடப்பட்டன. அதன் பின்பு தற்போது வரை அந்த கடைகள் ஏலத்திற்கு விடப்படவில்லை. அதற்கு பதிலாக கால நீட்டிப்பு உரிமைகள் வழங்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு உரிமைகளால் நகராட்சிக்கு கூடுதலாக வெறும் 15 சதவீதம் மட்டுமே வருவாய் கிடைக்கும். ஆனால் ஏலம் விடப்பட்டால் 50 அல்லது 100 சதவீதம் கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும் இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. அந்த கடைகள் கைமாறி கைமாறி வேறு நபர்கள்தான் நடத்தி வருகின்றனர். இந்த கால நீட்டிப்பை ரத்து செய்து பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும். தற்போது இந்த தீர்மானத்தை தவிர்த்து விட்டு பொது ஏல முறையை கொண்டு வந்தால் நகராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என பேசினர். இதற்கு தி.மு.க. நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப்படாததால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago