முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.1 - பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர்களை ஆந்திர முதல்வர் என்.கிரண் குமார் ரெட்டி நேற்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்கப்பபோவதாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேகர ராவ் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவது குறித்து காங்கிரஸ் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அப்படி இரண்டாக பிரிக்கும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு சரியும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. பிரிக்கப்பட்ட ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளது. அதனால் அதையும் காங்கிரஸ் இழக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். செல்வாக்கை இழக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆந்திர காங்கிரஸ் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்,சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இதர தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். ஆந்திர புதிய துணைமுதல்வர் கடந்த பல நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, காங்கிரஸ் கட்சியின் இதர தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆந்தராவை இரண்டாக பிரிக்கும்போது ஏற்படும் சூழ்நிலை குறித்து அவர்களிடம் துணைமுதல்வர் விளக்கியதாக தெரிகிறது.

இந்தநிலையில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர்களை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது தெலுங்கானா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஆகியோர்களையும் ரெட்டி சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்