முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜீனியரிங் கவுன்சிலிங் - மாணவி அனகா முதலிடம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.1 - மருத்துவம் மற்றும் என்ஜீனியரிங் கவுன்சிலிங் விளையாட்டு சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது. அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நிரப்பப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கக் கூடிய 100 இடங்களுக்கு 3 ஆயிரத்து 457 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 350 பேரின் சான்றிதழ் மட்டும் சரி பார்ப்பதற்காக அழைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டில் நாகர்கோவிலை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை அனகா அலங்கா மோனி முதலிடம் பெற்றார். 

2 வது இடம் பிடித்த வீராங்கனை மோகனபிரியா எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்தார். முதலிடம் பிடித்த அனகா கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படிப்பை தேர்வு செய்தார். மூன்றாவது இடம் பிடித்த விளையாட்டு வீரர் உசேன், மெக்கானிக்கல் என்ஜீனியரிங் பிரிவை தேர்வு செய்தார். நாலாவது இடம் பிடித்த செஸ் வீராங்கனை சவீதா, கிண்டி அரசு கல்லூரியில் இ.சி.இ. என்ஜீனியரிங் பிரிவையும், 5 வது இடம் பிடித்த வீரர் அமுதராஜ் மெக்கானிக்கல் படிப்பையும் தேர்வு செய்தனர். இவர்களுக்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் வழங்கினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விளையாட்டு வீரர்களுக்கான என்ஜீனியரிங் கவுன்சிலிங் முடிந்தது. என்றாலும் இதில் பங்கேற்க முடியாத விளையாட்டு வீரர்கள் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். இன்று முதல் 6 ம் தேதி வரை தொழில் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 7 ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 8 ம் தேதி முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்