முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி மாநிலம் தராவிட்டால்... சந்திரசேகரராவ் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை.01 - தனிமாநிலம் தராவிட்டால் தெலுங்கானா மீண்டும் பற்றி எரியும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் மத்திய அரசை எச்சரித்தார். ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தனி தெலுங்கானா கொள்கையை உருவாக்கிய ஜெயசங்கரின் மறைவிற்கு இரங்கல் பொதுக்கூட்டம் மடைபெற்றது. இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரச்கரராவ் உணர்ச்சி பொங்க ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனி தெலுங்கானா மாநிலம் அமைவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங் என்னிடம் உறுதியாக கூறியிருந்ததால் நாங்கள் நம்பிக்கையுடன் தொடர் போராட்டங்களை நிறுத்திவிட்டோம். அதந் பின் மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கவே ஆய்வுக்குழு அமைத்ததாக கூறியதையும் நம்பினோம் ஆனால் ஆய்வுக்குழுவினர் தனிமாநிலத்திற்கு பதிலாக கவுன்சில் ஆட்சிமுறைக்கு செய்தது நயவஞ்சகத்தனத்தையே காட்டுகிறது. பிரமரும், காங்கிரஸ் கட்சியினரும் சத்தியத்தை மீறி நடந்து கொள்கிறார்கள். எங்களை ஏமாற்றினால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வங்கக்கடலில் தள்ளி விடுவார்கள். எங்களுக்கு வேண்டியது தனிதெலுங்கானா தான். இதனைத் தவிர வேறு எந்த திட்டங்களையும் ஏற்க மாட்டோம். தனித்தெலுங்கானாவின் சிந்தனை சிற்பி விருப்பத்தை மீறி நடந்தால் மக்களின் இதங்கள் பற்றி எரியும். மீண்டும் நெருப்புக்குள் தள்ள வேண்டாம். பற்றி எரியும். இவ்வாறு அவர் கூறினார். இந்த இரங்கல் கூட்டத்திற்கு அனைத்து  கட்சிகளையும் சேர்ந்த பிரமுகர்கள், தெலுங்கானா வக்கீல்கள், மருத்துவர்கள், முன்னாள் ராஜ்ய சபை உப தலைவர் நஜ்மா அப்துல்லா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago