முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுடன் ஹசாரே சந்திப்பு இல்லை?

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.1 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரபல காந்தீயவாதியான அண்ணாஹசாரே நேற்று சந்தித்து பேசவில்லை. லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் பிரதமர், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர்களையும் கொண்டுவர வேண்டும் என்று அண்ணா ஹசாரே கூறிவருகிறார். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால் தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்ட அரசியல் கட்சி தலைவர்களை அண்ணா ஹசாரே சந்தித்து வருகிறார். எல்.கே. அத்வானி உள்பட பாரதிய ஜனதா தலைவர்கள், இடது கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், அஜீத் சிங் ஆகியோர்களை ஹசாரே சந்தித்து பேசினார். இதனையடுத்து சோனியா காந்தியை இன்று(நேற்று) ஹசாரே சந்திப்பதாக இருந்தது. ஆனால் சோனியாகாந்திக்கு முன்கூட்டியே நிகழ்ச்சிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதால் நேற்று இந்த சந்திப்பு நடைபெறவில்லை. இன்று சந்திப்பு நடக்கலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில் காங்கிரஸ் தலைவர் 2 பேர்களை ஹசாரே சந்தித்து பேசினார் என்று சிவில் சொசைட்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், வலது கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் ஆகியோர்களையும் ஹசாரே சந்தித்து பேசினார். 

லோக்பால் வரைவு மசோதா குறித்து இறுதி செய்ய சர்வகட்சி கூட்டம் வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கிடையில் வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்