முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் விரட்டியடிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம்,ஜூலை.1 - ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் சிங்கள கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனை தடுக்க தவறிய மத்திய அரசுக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 680 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் ஏராளமான படகுகளில் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பீரங்கி தாங்கிய படகுகள் மூலம் மீனவர்களை அச்சுறுத்தி மீன்பிடிக்க விடாமல் சிங்கள கடற்படையினர் துரத்தியடித்தனர். இது மட்டுமல்லாமல், தனுஷ்கோடி பகுதிக்கே சிங்கள கடற்படையினர் உதவியுடன் இலங்கை மீனவர்கள் வந்து தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி வீசினர். மீன் பிடிக்க விடாமல் அட்டூழியம் செய்தனர். 

இந்நிலையில் தமிழக முதல்வரின் முயற்சியால் நேற்று 23 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலையாகி திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை சிங்கள கடற்படையினர் வழிமறித்து மீன் பிடிக்க விடாமல் மிரட்டியுள்ளனர். மேலும் அவர்களை அங்கே நடுக்கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்க அனுமதிக்காமல் தொடர்ந்து அவர்களை கரையை நோக்கி துரத்தினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். 

தொடர்ந்து சிங்கள கடற்படையினரின் அட்டூழியத்தால் படகு ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் மட்டும் தினசரி பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு மீனவர்கள் அவதியடைந்து வருகின்றனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வருவாயாக ஈட்டப்படுகிறது. இருந்த போதிலும் சிங்கள கடற்படையினரிடம் இருந்து மீனவர்களை காக்காமல் மத்திய அரசு மெத்தனப் போக்கு காட்டி வருகிறது. இதனால் மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் முதலீட்டுத் தொகை அதிகரிப்பதால் மீனவர்களின் கடன் சுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

எனவே மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும். மேலும் படகுகளுக்கு டீசல் மானியம் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரங்களில் தலையிட்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட சமயத்தில் மீண்டும் கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago