முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 1 - பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், தி.மு.க. முக்கிய புள்ளியுமான தயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில் நிகழப்போகிறது என்று செய்திகள் வெளியாகி வரும் சூழ்நிலையில் பிரதமரை, தயாநிதி மாறன் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ.யின் பார்வை விழுந்திருக்கும் சூழ்நிலையிலும் மாறன் பதவி நீக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ள சூழ்நிலையிலும் பிரதமரை தயாநிதி மாறன் சந்தித்திருக்கிறார். இது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் அமைச்சர் ராசா தன் கேபினட் அமைச்சர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.யும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் இந்த வழக்கில் சிக்கியதை அடுத்து மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுக்கள் சிறப்பும் நீதிமன்றத்திலும் சரி, டெல்லி ஐகோர்ட்டிலும் சரி, நிராகரிக்கப்பட்டன. பின்னர் உச்சநீதிமன்றமும் கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது. இதையடுத்து கனிமொழிக்காக அவரது குடும்பத்தினர் காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திராவிட பாரம்பரியம் பற்றிப் பேசும் கருணாநிதி குடும்பம், தற்போது கோவில்களில் தஞ்சம் புகத் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில்தான் தயாநிதி மாறனும் பதவி இழக்கப்போகிறார் என்று செய்திகள் வருகின்றன. 2 ஜி.  உரிமங்கள் ஒதுக்கப்பட்டபோது தயாநிதி மாறனும் தொலைத் தொடர்பு அமைச்சராகத்தான் இருந்தார். 2001 முதல் 2007 வரை ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து மத்திய புலனாய்வுத்துறை ஏற்கனவே பூர்வாங்க விசாரணையை தொடங்கிவிட்டது. அப்போது ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.  அவர் தனது நிறுவனத்தை தான் விற்பதற்கு தயாநிதி மாறன் நிர்பந்தம் செய்ததாகவும், மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தை விற்றபிறகு அந்த கம்பெனி சன் டி.வி.யில் ரூ.600 கோடி முதலீடு செய்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார். சிவசங்கரனின் இந்த வாக்குமூலத்தை சி.பி.ஐ. பதிவு செய்தது. இதன் காரணமாக மாறன் மீதான பிடி இறுகி வருகிறது. எனவே அவர் எந்த நேரத்திலும் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் டெல்லியில் நேற்று பிரதமரை தயாநிதி மாறன் சந்தித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துவருகிறார்.  இருப்பினும் அச்சம் காரணமாகவோ என்னவோ, மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு அவர் நேற்று பிரதமரை டெல்லியில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பல யூகங்களை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago