முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. சார்பில் கடல் முற்றுகை போராட்டம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஜூலை,1 - தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பா.ஜ.க. சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழர் பிரச்சினையில் இந்தியா எந்த நிர்பந்தமும் தரவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்திய அரசின் வெளியுறவு செயலர் நிருபமாராவ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உடனடியாக இலங்கை சென்றனர். 

ஆனால் இந்திய அதிகாரிகள் ஆக்கபூர்வமான அழுத்தம் கொடுத்து பேசாமலேயே வந்துள்ளனர் என்பது ராஜபக்சே சொல்வதன் மூலம் தெளிவாகிறது. இலங்கை தமிழர் விஷயத்தில் இரண்டு அதிகாரிகளும் என்ன பேசினார்கள் என்று மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்துவதை கூட தடுக்க இயலாமல் இந்திய அரசு தவிப்பது மிகவும் மோசமான ஒன்று. தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி தமிழக பா.ஜ.க விரைவில் கடல் முற்றுகை போராட்டம் நடத்தும். அதிலும் தீர்வு இல்லையென்றால் கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்