முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயிலில் தங்க - வைர நகைகள்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூலை. 1 - பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் உள்ள பாதாள அறையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ் பெற்ற அனந்தபத்மநாப சுவாமி கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் திருவாங்கூர் அரசர்கள் காலத்தில் பெரும் சிறப்புடன் விளங்கியது. 1750 ம் ஆண்டு அப்போதைய அரசர் மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்ய செல்வம் அனைத்தையும் இக்கோயிலுக்கு தானமாக எழுதி வைத்தார். நம்மாழ்வாரின் பாடல்கள் மூலம் இக்கோயில் 10 ம் நூற்றாண்டிலேயே இருந்ததாக தெரியவருகிறது. 

1686 ம் ஆண்டு இக்கோயில் தீப்பிடித்து பலத்த சேதமடைந்தது. அதன் பின்னர் திருவாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மரின் முயற்சியால் மரத்தால் ஆன மூலவர் அகற்றப்பட்டு 12 ஆயிரம் சாலக்கிராமத்தினால் கடுசக்கரா என்ற கலவையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டது. ராஜ வம்சத்தினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் பாதாள அறைகள் உள்ளதாகவும் அவற்றில் ஏராளமான விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பான பொது நல வழக்கில் 2 கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு பாதாள அறைகளில் உள்ள பொருட்களை கணக்கிட உத்தரவிட்டது. 

தற்போது இதையடுத்து 3 பாதாள அறைகளில் உள்ள பொருட்களை அக்குழு கணக்கெடுத்து வருகிறது. கணக்கெடுப்பில் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள், பாத்திரங்கள், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குடைகள் போன்றவை பாதாள அறைகளில் இருந்தன. மேலும் எஞ்சிய அறைகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்