முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்.ஐ.சி.கேள்வித்தாள் அவுட் - முக்கிய குற்றவாளி கைது

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.28 - எல்.ஐ.சி. நிறுவனத்தில் ஊழியர் தேர்வுக்கான அகில இந்திய பரீட்சைக்கான கேள்வித்தாள் அவுட் ஆனது தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ( எல்.ஐ.சி. )  காப்பீட்டு நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரிகளுக்கான எழுத்து தேர்வுக்கு உரிய கேள்வித்தாள் தேர்வுக்கு முன்பாகவே டெல்லியில் வெளியானது. இந்த கேள்வித்தாள் அவுட்டானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி போலீசாருக்கும் இந்த அவுட் ஆன கேள்வித்தாள்கள் கிடைத்தன. அவற்றை உண்மையான கேள்வித்தாளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் உண்மையான கேள்வித்தாளில் இருந்த கேள்விகளே அந்த போலி கேள்வித்தாள்களிலும் இருந்தன. இதை அடுத்து டெல்லி கிரைம் பிராஞ்சு போலீசார் புலன் விசாரணை நடத்தினார்கள். இதை அடுத்து இந்தகேள்வித்தாள் அவுட்டிற்கு முக்கியமான காரணகர்த்தாவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். பவான் என்ற அந்த நபரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தகவல்களை டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ( குற்றப்பிரிவு )  அசோக் சந்த் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்