முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோவிலில் மேலும் அறைகளை திறக்க முடிவு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூன் 29 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள அறைகளில் 4 பாதாள அறைகள் கோர்ட்டு உத்தரவுப்படி நீதிபதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. மீதமுள்ள 2 பாதாள அறைகளும் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் அதாவது 18 ம் நூற்றாண்டில் திருவனந்தபுரத்தில்  கட்டப்பட்டது பத்மநாபசுவாமி திருக்கோவில். இந்த கோவிலில் 6 பாதாள அறைகள் உள்ளன. இந்த அறைகள் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கின்றன. இந்த அறைகளில் சுவாமிக்கு உரிய அரிய கலைநுட்பம் கொண்ட தங்க, வைரம் மற்றும் வைடூரிய நகைகள் பழங்கால அரிய பொக்கிஷங்களைக் கொண்ட புதையல்கள் உள்ளன. 

இந்த பொக்கிஷ அறைகள் பாதுகாப்பின்றி இருப்பதாக பக்தர் ஒருவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து பத்மநாபசுவாமி கோவிலை கேரள மாநில அரசே ஏற்றுக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மன்னர் பரம்பரையைச் சேர்ந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, கோவில் இருக்கும் 6 பாதாள அறைகளையும் திறந்துபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு  நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோர் முன்னிலையில் பத்மநாபசுவாமி கோவிலின் 6 பாதாள அறைகளில் 4 அறைகள் திறக்கப்பட்டன. நீதிபதிகளுடன் கேரள மாநில கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார், கோவில் நிர்வாக அதிகாரி ஹரிக்குமார், தொல்பொருள் ஆய்வுத்துறை பிரதிநிதி ஒருவர், மனுதாரர் மற்றும் மன்னர் பரம்பரை பிரதிநிதிகளும் இருந்தனர். பாதாள அறைகள் திறக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் யாரும் அந்த இடத்தில் அனுமதிக்கப்படவில்லை. பாதாள அறைகளில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் அரிய பொக்கிஷங்கள் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் பொருட்களின் மதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.  மீதமுள்ள இரண்டு பாதாள அறைகளும் விரைவில் திறந்து பார்க்கப்படும் என்றும் தெரிகிறது. இதுதொடர்பான முடிவு வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிரதிநிதிகளில் ஒருவரான எம்.என்.கிருஷ்ணன் தெரிவித்தார். 

இந்த பாதாள அறைகளில் உள்ள பொருட்கள் குறித்து பட்டியலிடப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்யப்படும். பட்டியல் விபரங்கள் குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்க முடியாது என்று ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago