முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.2 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நீடித்தது. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகிறது. அது குறித்தும் விரைவில் மாற்றி அமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவை குறித்தும் ஜனாதிபதியுடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமரை தயாநிதி மாறன் சந்தித்து பேசினார். அப்போது அவரை பதவி விலகும்படி பிரதமர் கேட்டுக் கொண்டாராம். ஆனால் தயாநிதி மாறன் தான் நிரபராதி என்றும், அதை நிரூபிக்க அவகாசம் தருமாறும் கேட்டுக் கொண்டாராம். ஆனால் தி.மு.க.வினரோ இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறி மழுப்புகிறார்கள். எது எப்படியோ தயாநிதி மாறன் பதவி தற்போது ஊசலாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. மேலும் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணாவின் செயல்பாட்டில் காங்கிரஸ் மேலிடத்திற்கு திருப்தி இல்லையாம். எனவே அவருக்கு பதிலாக அந்த இடத்தில் அந்தோணியை நியமிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இதே போல் ப. சிதம்பரத்தின் இலாக்காவும் மாற்றப்படும் என்று பேச்சு அடிபடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லியில் ஜனாதிபதியை பிரதமர் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையில்  மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவருடன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்