முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவுக்குள் பிரதமர்: கருணாநிதி விளக்கம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.2 - லோக்பால் மசோதா விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று சொன்னது ஏன் என முன்னாள் முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, லோக்பால் மசோதாவில் பிரதமரையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் தங்களின் நிலைப்பாடு என்ன என்று டெல்லியில் இருந்து திரும்பிய போது செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு தி.மு.க ஆட்சியில் ஊழல் ஒழிப்பு சட்டம் மாநில அளவில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் முதல்வரையும் குற்றம் சாட்டலாம். அவர் மீதும் வழக்கு போடலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அதுதான் தி.மு.க.வின் நிலை என்று தெரிவித்தேன். 

இதைத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு மாறான ஒரு கருத்தினை நான் தெரிவிப்பது போல சில பத்திரிக்கைகள் எழுதியிருந்தன. அதைப் போல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையில் வந்த பெட்டி செய்தியில் விசாரணை வரம்பிற்குள் பிரதமரும், நீதிபதியும் வர வேண்டும் என்று அன்னா ஹஸாரே சொல்வதற்கு முன்பே அம்பேத்கர், ஹிரேன் முகர்ஜி, ஏ.பி. பரதன், பிரகாஷ் காரத் என இந்தியாவின் அனைத்து கட்சி தலைவர்களும் கூறுவதாக எழுதியுள்ளது.

பிரதமரையும் அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னது. நாம் அதற்காக பயப்படவில்லை. தெளிவாக இருக்கிறோம் என்று உலகத்தின் முன்பு தெளிவாக்குவதற்கு அது பயன்படுமே என்பதால்தான். எனது இந்த கருத்து எந்த அடிப்படையிலே சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் பிரதமரும் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்