முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் சிறையில் கனிமொழியுடன் டி.ஆர். பாலு சந்திப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.2 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணாநிதி மகள் கனிமொழியை டி.ஆர்.பாலு, கே.என். நேரு உள்பட தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழியை சமீபத்தில் அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலினும் சந்தித்து பேசினர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன் தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், பூங்கோதை ஆகியோர் சந்தித்து பேசினர். நடிகர் வாகை சந்திரசேகரும் உடன் இருந்தார். சுமார் 30 நிமிடம் அவர்கள் கனிமொழியை சந்தித்து பேசினார்கள். மத்திய அமைச்சரவையில் இருந்து விலக தயாநிதி மாறனை பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்தும் கனிமொழியிடம் தி.மு.க. பிரமுகர்கள் பேசியதாக தெரிகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்தியாவை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். மகனுடன் கனிமொழி தனிமையில் சிறிது நேரம் பேசினார். இதற்கிடையே கனிமொழி மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் நடக்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்