முக்கிய செய்திகள்

ஹசன் அலியின் சொத்துக்களை முடக்க உத்தரவு

Image Unavailable

புது டெல்லி,ஜூலை.2 - வரி ஏய்ப்பு புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹசன் அலியின் ரூ. 50 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. புது டெல்லியில் கோரேகான் பார்க் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடியில் அலி வசித்து வந்த 3 தளங்கள் உட்பட பல்வேறு அசையா சொத்துக்களை முடக்கவும், மெர்சிடஸ் வகை கார்கள் 3 உட்பட 6 கார்களையும், மும்பை, புனேயில் உள்ள அலிக்கு சொந்தமான ராயல் வெஸ்டர்ன் இந்தியா டர்ப் கிளப் லாயத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 32 குதிரைகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: