முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வ. மருத்துவமனையில் 18 குழந்தைகள் பலி

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஜூலை.2 - மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் 48 மணி நேரத்தில் 18 குழந்தைகள் இறந்துள்ளன. மாநில சுகாதார துறையும் இதனை உறுதி செய்துள்ளது. 

டாக்டர்களின் கவனக்குறைவுதான் குழந்தைகள் இறக்க காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனை தலைமை மருத்துவர் மிரினாள் கே. சாட்டர்ஜி இது குறித்து கூறும் போது, 

குறைப் பிரசவம், எடை குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள்தான் இதற்கு காரணம். இறந்த குழந்தைகளில் பல தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருந்தன என்றார். 

குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 18 குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். வேறு மருத்துவமனையில் பணியாற்றும் இரு டாக்டர்கள் விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் அறிக்கை அளிப்பார்கள். இதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago