முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் 6 ஆண்டுகள் தங்கியிருந்த ஒசாமா..!

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.2 - சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத்தில் அதிக பாதுகாப்போடு 6 ஆண்டுகள் பதுங்கியிருந்ததாகவும், அமெரிக்க படைகள் தம்மீது தாக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரி ஜான் பிரெனன் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பின்லேடன் தான் பதுங்கியிருந்த இடத்தை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததோடு தன்னை சுற்றிலும் அதிகபட்ச பாதுகாப்புடன் 6 ஆண்டுகள் இருந்துள்ளார். அந்த கட்டிடத்தினுள் இருந்தவர்கள் எவருமே அங்கு வந்த பிறகு வெளியே செல்லவே இல்லை. அபோட்டாபாத்தில் பின்லேடன் பதுங்கியிருந்த விபரம் அந்நாட்டின் உயர்நிலை தலைவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பாகிஸ்தான் ராணுவத்துக்கோ அல்லது புலனாய்வு அமைப்புக்கோ அவர் பதுங்கியிருந்த விவரம் தெரியவில்லை. இருப்பினும் பின்லேடனுக்கும், அங்கு இருந்தவர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அபோட்டாபாத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பார்க்கும் போது அல்கொய்தாவின் எதிர்காலம் குறித்த அச்சம் பின்லேடனின் மனதில் இருந்தது தெரியவந்துள்ளதாக பிரெனன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்