முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்கோட்டில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி,பிப்.28 - பஞ்சபள்ளி சின்னலாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளிகரை ஏரி வழியாக விவசாய நிலங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை பங்கேற்று பேசினார்.

அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் திரளாக கலந்து கொண்டு வருவதன் மூலம் மைனாரிட்டி தி.மு.க. அரசு வரும் தேர்தலில் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசு அதற்கு நேரிடையாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் பிரச்சனை குறித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது அ.தி.மு.க. மட்டுமே. வீராணம் திட்டத்தில் பைப்போட்டு மக்களை ஏமாற்றியது போல தற்போது ஓகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்திலும் பைப் போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்க வந்ததும் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரு கேபினட் மத்திய அமைச்சர் மகா ஊழல் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இதுவே முதல் தடவை. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ரூ.180 ஆயிரம் கோடி ஊழல் செய்து அந்த பணத்தை கருணாநிதி குடும்பத்துடன் பங்கு போட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். 

பஞ்சம்பள்ளி சின்னலாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக 10 ஏரிகளில் கால்வாய் மூலம் விவசாய தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அதை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு விட்டது. இதனை கண்டித்தும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாலக்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு. தம்பித்துரை தலைமை வகித்து பேசினார். தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பாலக்கோடு எம்.எல்.ஏவுமான கே.பி. அன்பழகன் முன்னிலை வகித்தார். 

மேலும் மு. தம்பித்துரை பேசும் போது, 

பஞ்சம்பள்ளி சின்னலாறு அணையின் மூலம் விவசாயிகளுக்கு ஏரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வகுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு விவசாயிகளையும் கிராமப்புற மக்களையும் வஞ்சித்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர்பேசும் போது, அடுத்து அமையவிருக்கும் அ.தி.மு.க ஆட்சியின் போது இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றார். கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஊழல் போன்ற பிரச்சினைகளால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தி.மு.க. அரசையும் கருணாநிதியையும் ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு விரைவில் வந்து விட்டதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

புட்நோட் :

தருமபுரி மாவட்டம் பஞ்சம்பள்ளி அணையின் உபரி நீரை பாலக்கோடு சுற்றியுள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை செயல் படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தம்பித்துரை எம்.பி., பேசினார். உடன் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., வும் நிர்வாகிகளும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்