முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமி ஆசாரம் பாபுவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ராய்பூர்,ஜூலை.2 - நாட்டை விட்டு சோனியா காந்தி வெளியேறும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படும் சுவாமி ஆசாரம் பாபுவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டீஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ராமன் சிங், ஆசாரம் பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய சுவாமி பாபு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், அதன் தலைவர் சோனியா காந்தியையும் தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. சோனியா காந்தியை நாட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பாபு கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு பாபுவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாபு இவ்வாறு கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரசார் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி குறித்து மத தலைவர் பாபு விமர்சித்து இருப்பது ஜனநாயகத்தை இழிவுபடுத்துவது போன்றதாகும் என்று சட்டீஷ்கர் மாநில காங்கிரஸ் செயதி தொடர்பாளர் ரமேஷ் வர்யலானி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். சோனியா காந்தி இந்திய குடிமகள். இந்திய பாராளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் பாபா இவ்வாறு கூறியிருப்பது மக்களையும் இழிவுபடுத்துவதுபோலாகும். அதனால் பாபு உடனடியாக தாம் கூறியதை வாபஸ் பெறுவதோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் வர்யலானி கோரினார். 

சுவாமி பாபுவை சுற்றிலும் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள். சமூக உணர்வுகளை தூண்டிவிட பாபா முயற்சி செய்கிறார் என்று சட்டீஷ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் கூறியுள்ளார். மேலும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாபு உருவப்பொம்மையை இளைஞர் காங்கிரசார் எரித்தனர். இதற்கிடையில் பாபு கூறியதை சரிக்கட்டும் பாபு கூறியதை திருத்திக்கூறியிருக்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மதத்தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றுதான் பாபு கூறினார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்