முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமி அடுத்த அதிரடி சாகும்வரை உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூலை 2 - முதல்வர் எடியூரப்பாவை கண்டித்து தலைமைச் செயலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறது. எடியூரப்பா குடும்பத்தினர் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடியாக குமாரசாமி குடும்பத்தினர் ரூ. 1,500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடியூரப்பா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பெங்களூரில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், குமாரசாமி சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து 53 பக்க புத்தகத்தையும் வெளியிட்டார். இது கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி, எங்கள் குடும்பம் ரூ. 1,500 கோடிக்கு முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இதில் உண்மை ஏதும் இல்லை என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன். இதில் ஆதாரங்கள் இருந்தால் எங்கள் குடும்பத்தின் மீது தாராளமாக வழக்கு தொடரலாம். அவ்வாறு இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்தியுள்ளார்கள். இது தொடர்பாக எடியூரப்பாவுக்கு இன்னும் ஒருவாரம் அவகாசம் தருகிறோம். அவர் அவ்வாறு நிரூபிக்காவிட்டால் மாநிலத் தலைமை செயலகமான விதான் சவுதா முன்பு நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார் குமாரசாமி. மேலும் எடியூரப்பா அமைக்கும் எந்த விசாரணைக் கமிஷனையும் சந்திக்க நான் தயாராக இருப்பதாகவும் குமாரசாமி கூறினார். 

இந்த நிலையில் குமாரசாமியின் தந்தை தேவகவுடா முதல்வர் எடியூரப்பாவின் வீட்டின் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதையும் ஒருவகையில் எடியூரப்பா சமாளித்தார். தற்போது  குமாரசாமி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது எடியூரப்பாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago