முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? ராமதாஸ் பேட்டி

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 -  உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க நீடிக்குமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுதான் முடிவு செய்யும் என்றும்,  உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் முடிவு  செய்துவிடுவோம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு முன்பு பா.ம.க. சார்பில் மாதிரி பட்ஜெட் வெளியிடப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான பா.ம.க.வின் மாதிரி பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:​

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் எத்தனை? அதில் நிறைவேற்றப்பட்டவை எத்தனை என்ற விவரங்களை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போதைய நிதிநிலை குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு எந்த அளவு பயன் அளித்துள்ளது என்பதையும் அறிக்கையாக வெளியிட வேண்டும். மாநில அரசு இட ஒதுக்கீடு கொள்கையை வரையறுக்க மத்திய அரசை வற்புறுத்தவேண்டும்.  அனைத்து குழந்தைகளுக்கு 12​ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை nullக்கி விட்டு இந்த ஆண்டே 1 முதல் 12​ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழு அமைக்கவேண்டும். தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.   மின்தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின் உற்பத்தியில் மக்களை ஈடுபட செய்ய வேண்டும்.

காற்றாலை, சர்க்கரை ஆலை மற்றும் கழிவுப் பொருட்களில் இருந்து மின் உற்பத்தி செய்யும் முறைக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இளைஞர்கள் பாதை மாறி செல்வதற்கு குடிப்பழக்கமும், சினிமாவும்தான் காரணம். குறைந்தது 5 ஆண்டுகள் இந்த இரண்டையும் தடை செய்து விட்டால் இளைஞர்களை திருத்த முடியும். முதல் கட்டமாக மது விற்பனையை பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் நடத்தவேண்டும். சனி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் மதுக்கடைகளை மூடவேண்டும்.

சென்னை மற்றும் நகர பகுதிகளில் பொது இடங்களிலும், கல்வி நிறுவன பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  எங்கள் கட்சியின் மதிப்பீட்டின்படி நடப்பு ஆண்டின் மொத்த வருமானம் 81 ஆயிரத்து 635 கோடி ரூபாய். செலவு 81 ஆயிரத்து 125 கோடி. ரூ.510 கோடி மீதம் வரும். சென்ற ஆண்டின் பற்றாக்குறைக்கு சம்பள உயர்வுதான் காரணம். 

 கேள்வி:​ இலங்கை தமிழர் பிரச்சினையில் அந்த நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?

பதில்:​ இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.

கே:​ உங்கள் மாதிரி பட்ஜெட்டை முதல்​அமைச்சரிடம் கொடுப்பீர்களா?

ப:​ அதற்கான வாய்ப்பு இல்லை. வீட்டு வாசலிலாவது கொடுத்து விடுவோம்.

கே:​ தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறதா?

ப:​ தனிப்பட்ட முறையில் நான் இதற்கு உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது. கட்சியின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடிதான் முடிவு செய்யும்.

கே:​ உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கூட்டணி பற்றி முடிவு செய்து விடுவீர்களா?

ப:​ உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் முடிவு செய்து விடுவோம்.

கே:​ ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய மந்திரி தயாநிதிமாறனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:​ சட்டம் அதன் கடமையை செய்யும்.  கே:​ லோக்பால் சட்ட மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து உங்கள் கருத்து?

ப:​ பிரதமர், nullதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், முத்துக்குமார், சைதை சிவா, வி.ஜே.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago