முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் கூட்டுகுழு விசாரணை - மேல்சபை எம்.பிக்கள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,பிப்.28 - கூட்டுக் குழு தொடர்பான 10 மேல்சபை உறுப்பினர்கள் அறிவிக்கப்படவிருக்கின்றனர். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த 30 உறுப்பினர்கள் இடம் பெற உள்ளனர். இதில் பாராளுமன்றத்தில் இருந்து 20 பேரும், மேல்சபையில் இருந்து 10 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. மேல்சபை சார்பில் 10பேர் இன்று அறிவிக்கப்படவுள்ளனர். 

இதில் காங்கிரஸ், பா.ஜ.க. சார்பில் 2 உறுப்பினர்களும் மற்ற கட்சிகளில் இருந்து 6 உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர். பா.ஜ.க. சார்பில் ரவிசங்கர் பிரசாத், அலுவாலியா ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என அக்கட்சி ஏற்கனவே தெரிவித்து விட்டது. மற்ற கட்சிகளில் தி.மு.க. சார்பில் சிவா, கம்யூனிஸ்டு சார்பில் சீதாராம் எச்சூரி, பகுஜன் சமாஜ் சார்பில் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

 மேல்சபை உறுப்பினர்கள் நியமனம் முடிந்ததும் இந்த பட்டியலை சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கப்படும். அவர் இரு சபைகளிலும் இடம் பெற்றுள்ள 30 பேர்களில் ஒருவரை கூட்டுகுழு தலைவராக நியமிப்பார். காங்கிரஸ் மூத்த எம்.பிக்களான சாக்கோ அல்லது கிஷோர் சந்திர தியோ ஆகிய இருவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago