முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியா தீ விபத்தில் 7 பேர் கருகி பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூலை.03 - சவுதி அரேபிய தலைநகர் ரியாத் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலியானார்கள்.பலியானவர்களில் 5 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொரு இந்தியர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். ரியாத் நகரில் அல் பத்தா என்ற பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் இவர்கள் பலியானதாக மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சர் இ.அகமது திருவனந்தபுரத்தில் தெரிவித்தார். இது பற்றி மேலும் கூறிய அவர் பலியான 6 இந்தியர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ரியாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்திய அரசின் செலவிலேயே பலியானவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடுபத்திற்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் இச்சம்பவம் குறித்து தனது துயரத்தையும் வெளிப்படுத்தினார். தீ விபத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய முழுமையான விராசணை நடத்துமாறு சவுதி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் அகமது மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 4 hours ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago