முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா மீது நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து வற்புறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன்,ஜூலை.3 - அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இங்கிலாந்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. 

பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனை நேற்றுமுன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன், அமெரிக்க படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டான். அதனால் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்து அந்த இயக்கத்தை ஒழிப்பதற்கு இதுதான் தரியான தருணம் என்று ஜர்தாரியை கேமரூன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். 

பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியும் இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் சந்தித்து பேசியது முதல்தடவையாகும். இந்த சந்திப்பின்போது தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து போரிடுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கேம்ரூன் பாராட்டு தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உறுதி பூண்டியிருப்பதற்கு பிரதமர் கேம்ரூன் பாராட்டினார் என்று பின்னர் கேம்ரூன் அலுவலக பத்திரிகை தொடர்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால்தான் உலக அளவில் நல்லது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆப்கானிஸ்தானில் சமதானம் மற்றும் அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு இருதலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்