முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன்: ஆடவர் இறுதியில் நடால் - ஜோகோவிக் மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 3 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தைக் கைப்பற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், செர்பிய வீரர் ஜோகோ விக்கும் இறுதிச் சுற்றில் பலப் பரிட்சை நடத்த உள்ளனர். இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்ட ன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந் த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போ து இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடாலும், இங் கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவும் மோதினர். 

இதன் முதல் செட்டில் 4 -ம் நிலை வீரரான முர்ரே சிறப்பாக ஆடி, 7 - 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பின்பு நடந்த செட்டுகளில் நடா லின் ஆதிக்கம் இருந்தது. அவரது அபாரமான ஆட்டத்தில் முர்ரே நிலை குலைந்தார். 

இறுதியில் நடால் 6- 2, 6 - 2, 6 - 4 என்ற செட் கணக்கில் முர்ரேயை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இந்தப்போட்டி சுமார் 1 மணி மற்றும் 10  நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு நடால் 3 -வது முறை யாக நுழைந்து உள்ளார். இதில் 2 முறை (2008,10) பட்டம் வென்றார். தற்போது 3 -வது முறையாக விம்பிள்டன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளார். 

இங்கிலாந்தின் முன்னணி வீரரான முர்ரேயின் விம்பிள்டன் கனவு மீண்டும் நசுங்கியது. அவர் தொடர்ந்து 3 -வது முறையாக விம்பிள்ட ன் அரை இறுதியில் தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு அரை இறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக்கும், பிரான்ஸ் இளம் வீரர் சோங்கோவும் மோதினர். செர்பிய வீரர் நோ வக் உலகின் 2 -ம் நிலை வீரராவார். 

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் இறுதியில் ஜோகோவிக், 7 - 6(7), 6 -3, 6 - 7(11), 6 -3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் முதன் முறையாக விம்பிள்ட ன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்