Idhayam Matrimony

பாகிஸ்தான் அதிபருடன் பிரிட்டிஷ் பிரதமர் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன்,ஜூலை.3 - அல்கொய்தா இயக்கத் தலைவனும், சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடன் ஒழித்துக்கட்டப்பட்டதை அடுத்து அந்த இயக்கத்திற்கு எதிராக தீர்க்கமாக செயல்பட்டு அல்கொய்தாவை ஒழித்துக்கட்டுமாறு பாகிஸ்தானை பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் வலியுறுத்தி உள்ளார். கடந்த மே மாதம் 2 ம் தேதி அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது தெரிந்ததே. இதையடுத்து அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஜவாஹிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவாஹிரியையும் ஒழித்துக் கட்டுவோம் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலையில் பிரிட்டிஷ் நாட்டின் தலைநகர் லண்டனில் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரது சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது பின்லேடன் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டான். ஆகவே அவனது இயக்கத்திற்கு எதிராக தீர்க்கமாக செயல்பட்டு அல்கொய்தா இயக்கத்தை வேரறுக்குமாறு ஜர்தாரியை கேமரூன் கேட்டுக் கொண்டார். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்த நேரத்தில் அல்கொய்தாவை தீர்க்கமாக செயல்பட்டு ஒழித்து விடலாம் என்றும் கேமரூன் தெரிவித்தார். 

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு கேமரூனும், ஜர்தாரியும் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இருவரும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து விவாதித்தார்களாம். எல்லா மட்டத்திலும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஜர்தாரியை கேமரூன் கேட்டுக் கொண்டார். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் முயற்சிகளையும் கேமரூன் பாராட்டினாராம். தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் முழு உறுதியோடு இருக்கிறதாம். அதனால்தான் பாகிஸ்தானை கேமரூன் பாராட்டினாராம். இந்த சந்திப்பின் போது இருவரும் ஆப்கானிஸ்தானில் செய்யப்பட வேண்டிய புணரமைப்பு மற்றும் அமைதி குறித்தும் விவாதித்தார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்