முக்கிய செய்திகள்

கார்த்தி திருமணம்: நடிகர் - நடிகைகள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை,ஜூலை.3 - பிரபல நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி, ரஞ்சனி திருமணம் கோவை கொடீசியா அரங்கில் இன்று காலை 5.45 மணிக்கு நடக்கிறது. கோவை வந்த நடிகர் சிவக்குமார், கார்த்தி, சூர்யா, ஜோதிகா ஆகியோர் சூலூர் காசி கவுண்டம்பாளையத்தில் உள்ள நடிகர் சிவக்குமாரின் சொந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு திருமண சடங்குகள் நடந்தது. முதலில் வீட்டில் சாமி கும்பிட்ட பின்பு அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதில் சிவக்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். 

விநாயகரை தரிசித்த கார்த்தி உட்பட அனைவரும் திருமணம் நடைபெறும் கொடீசியா அரங்கிற்கு வந்தனர். திருமண முதல் நாள் சிறப்பு நிகழ்வு நேற்று மதியம் துவங்கியது. பட்டினி சாத விருந்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இரவு 7 மணிக்கு வரவேற்பு விருந்தும், இரவு 9 மணிக்கு இணைச்சீர் விருந்தும் நடைபெற்றது. 

திருமணத்திற்கு நடிகர், நடிகைகள்,உறவினர்கள் நேற்று மாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தங்குவதற்காக கோவையில் உள்ள லாட்ஜ்களில் அறைகள் முன் பதிவு செய்யப்பட்டிருந்தன. திருமணத்தில் பங்கேற்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மண்டபத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் கார்த்தி திருமணத்தை வாழ்த்தி கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்: