முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதர்துறை புதிய அமைச்சராக செந்தூர் பாண்டியன் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 4 - தமிழக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய அமைச்சராக செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில்  முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில்  அ.தி.மு.க. கட்சி மூன்றாவது முறையகாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. கடந்த இரண்டு முறையும் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மக்களுக்கு வேண்டிய பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றியும், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முதலிட மாநிலமாக்கியது கண்டு அனைத்து தரப்பினரும் பாராட்டுதல்களை தெரிவித்திருந்தனர்.  இம்முறை ஜெயலலிதா பதவி ஏற்றவுடனே மக்கள் நலத்திட்டமான இலவச அரிசி திட்டம்  உள்ளிட்ட 7 கோப்புகளில் கையெழுத்திட்டு நடைமுறையும் படுத்தினார். இதனால் தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பசி, பட்டினியின்றி  வாழும் புதிய தமிழகத்தையும் உருவாக்கியுள்ளார். முதலில் 33 பேர் கொண்ட  அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சர்  மரியம் பிச்சை எம்.எல்.ஏ. பதவி ஏற்பதற்கு முன்பு சாலை விபத்தில்  சிக்குண்டு காலமானதை அடுத்து அமைச்சரவையில் முதல் முறையாக  மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்  மரியம் பிச்சைக்கு பதிலாக ஏ.முகமது ஜான் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டார் . தற்போது இரண்டாவது முறையாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து  கவர்னர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது .முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பை தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்டுள்ளார்.
புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளன கடையநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் செந்தூர்பாண்டியன் இன்று பிற்பகல் 2 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரான செந்தூர் பாண்டியனுக்கு கதர்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா  அமைச்சர் பொறுப்பிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார்.
இத்தோடு மேலும் 4  அமைச்சர்களின்  இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளது.
1. அமைச்சர் புத்தி சந்திரன் வகித்து வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2.  அமைச்சர்  கோகுல இந்திராவிடம் இருந்த  வந்த வணிக வரித்துறை  உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமுர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
3.அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வகித்த வந்த உணவுத்துறை அமைச்சர்  புத்திசந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
4. அமைச்சர்  செந்தமிழனுக்கு செய்தி மற்றும் விளம்பத்துறையுடன் கூடுதல் பொறுப்பாக சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பி.வி.ரமணா வகித்து வந்த கதர் துறை  தற்போது புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ள செந்தூர் பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டதால், அமைச்சர் பி.வி. ரமணா கைத்தறி மற்றும் ஜவுளித்துறையை  கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்