முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை விமான நிலைய ராடாரில் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூலை- 4 - மும்பை விமான நிலையத்தில் உள்ள ராடார் சிஸ்டத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதை அடுத்து  நேற்று விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் தாமதங்கள் ஏற்பட்டன. இந்தியாவின் வர்த்தக தலைநகர் என்றழைக்கப்படும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராடார் சிஸ்டத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில்  திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால்  விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் பல குளறுபடிகள் ஏற்பட்டன. குறிப்பாக வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டன. சில விமானங்கள் 30  நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
சுமார் 2 மணி நேர பரபரப்புக்கு பிறகு இந்த தொழில்நுட்பக்கோளாறு  சரி  செய்யப்பட்டது. இருந்தாலும் நேற்று காலை 6 மணி முதற்கொண்டுதான் வழக்கமான இயக்கம் தொடங்கியது.
இந்த தொழில்நுட்பக்கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என்றாலும்  இந்த கோளாறு காரணமாக பெருமளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள்  கூறினர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago