முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கடல்கொள்ளை தடுப்பு ஒப்பந்தம்: இந்தியா வெளியேறியது

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 4 - சர்வதேச கடல்கொள்ளை தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. கடல் கொள்ளையை தடுப்பதில் இந்திய முக்கிய பங்கு வகித்த வந்தபோதிலும் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அதிலிருந்து வெளியேறியது.  கடலில் சரக்கு கப்பல்கள் வரும்போது அதை கொள்ளையர்கள் வழி மறித்து அதில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிடுகின்றனர். கொள்ளையை தடுக்கும் மாலுமிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை மீட்க கோடிக்கணக்கில் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. தொகை கொடுக்காவிட்டால் அவர்கள் கொள்ளையர்களால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இந்த கொள்ள சம்பவத்தில் சோமாலியா நாட்டுக்காரர்கள்தான் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும் சோமாலியா நாட்டுக்கு அருகே உள்ள ஏமன் கடலில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து போர்க்கப்பல் ஒன்றை இந்தியா நிறுத்தி சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு கொள்ளையர்களை ஒடுக்கி வருகிறது.  இந்தநிலையில் 21 நாடுகள் சேர்ந்து சர்வதேச கடல் கொள்ளை தடுப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படவில்லை. ஒப்பந்த நாடுகள் பட்டியலில் கூட இல்லை. வெறும் பார்வையாளர் அந்தஸ்து மட்டுமே இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. கடல் கொள்ளையை தடுப்பு குறித்து பயிற்சி நிலையம் ஒன்றை திஜிபெளதி நகரில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தில் 21 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்திய கடற்படைக்கு அழைப்பு இல்லை. இதுகுறித்து கேட்டதற்கு செயல்திட்டத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிறிய நாடுகளான மொரீஷியஸ் செஸ்சிலிஸ் போன்ற சிறிய நாடுகள் கூட உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய நாடான இந்தியா சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய கடற்படையானது வெளியுறவு அமைச்சகம் மீது கோபம் அடைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்