முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுதம்மேனன் வீட்டை முற்றுகையிட்ட இந்து அமைப்பினர்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.28 - காக்க காக்க, பச்சைக் கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவயா, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் தற்போது நடுநிசி நாய்கள் என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்தப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. நடுநிசி நாய்கள் படத்தில் இளம் வயதில் செக்ஸ் தொல்லையால் மனநிலை பாதிக்கப்பட்ட கதாநாயகன் தனது வளர்ப்பு தாயிடம் தவறாக நடப்பது போல் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்து மக்கள் கட்சி நிர்வாகி கண்ணன் தலைமையில் 20 நபர்கள் டைரக்டர் கவுதம் வீடு முன் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். நாய்களுடன் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தரமணி பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி தெருவில் உள்ள கவுதம் வீட்டுக்கு சென்றனர். போலீசார் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நிர்வாகிகள் குமார், கண்ணன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்னர். 

அப்போது இந்து மக்கள் கட்சி நிர்வாகி கண்ணன், கூறியதாவது:-​ பகவான் கிருஷ்ணர் தன்னை பெற்றெடுத்த தாய் தேவகியை விட தனது வளர்ப்பு தாய் யசோதாவைத் தான் அதிகம் மதித்தார். அது போல் ராமர் தனது தாய் கவுசல்யாவை விட வளர்ப்பு தாய் வைதேகியிடம் தான் அதிக பாசம் வைத்திருந்தார். அவர் காட்டில் இருந்து திரும்பியதும் வளர்ப்புத் தாய் வைதேகியைத் தான் முதலில பார்த்தார். இதிகாசங்களிலும், புராணங்களிலும் வளர்ப்பு தாயைத் தான் பெருமையாக காட்டினார்கள். ஆனால் வித்தியாசமாக சினிமா படம் எடுக்கிறோம் என்ற பெயரில் வளர்ப்பு தாயை அவமதித்து இருக்கிறார்கள். நடுநிசி நாய்கள் படத்தில் வரும் அந்த காட்சியை nullநீக்க வேண்டும். இல்லை யெனில் படத்தை தடை செய்ய வேண்டும். இனி இது போன்று கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் படம் எடுக்க கூடாது. மீறி படம் எடுத்தால் அதை தமிழ் நாட்டில் ஓட விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். 

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது:-​ நடுநிசி நாய்கள் படத்தின் கதாநாயகன் மனநிலை பாதிக்கப்பட்டவன், நல்லது கெட்டது அவனுக்கு தெரியாது. தன்னைச் சுற்றி இருப்பது யார் என்றும் தெரியாது. சிறு வயதில் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பான். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த காட்சியை எடுக்கவில்லை. வாரணம் ஆயிரம் போன்ற படங்களை எடுத்தேன். அப்போது என்னை யாரும் மாலைபோட்டு பாராட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்