முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வெட்டு இல்லாத நிலை தமிழக முதல்வரின் நிர்வாக திறமையே காரணம்-வைகைச்செல்வன் புகழாரம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

அருப்புக்கோட்டை, ஜூலை.- 4 - மின்வெட்டு இல்லாத நிலை என தமிழகம் முன்னேற தமிழக முதல்வரின் நிர்வாக திறமையே காரணம் என அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ. வைகைச்செல்வன் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார். இதுபற்றிய விபரம் வருமாறு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்டது கஞ்சநாயக்கன்பட்டி. பெயரில் கஞ்சம் கொண்டதால் என்னவோ இங்கு கடந்த  திமுக அரசோ தனது கஞ்சத்தை காட்டியே வந்துள்ளது. கஞ்ச நாயக்கன்பட்டிக்கு கடந்த 15 வருட காலமாக பேருந்து வசதி என்பதே கிடையாது. இங்கிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பள்ளிக்கு செல்ல தினமும் ஒரு போராட்டத்துடன் சென்றுவந்தனர். பள்ளி செல்லும் குழந்தைகள் எப்போது வீடு திரும்பும் என நெஞ்சில் பதபதப்புடன் இருக்கும் தாய்மார்கள். வேலைக்குசெல்லும் பெரியோர்களும் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருந்தனர். கிட்டத்தட்ட நீர் காணா பாலைவனம் போல் தவித்த மக்களுக்கு அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச்செல்வன் தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதியான கஞ்ச நாயக்கன்பட்டிக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்.
போக்குவரத்து துறை அலுவலர்களிடம் பேசிய கஞ்சநாயக்கன்பட்டி - அருப்புக்கோட்டைக்கு பேருந்து கொண்டு வந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுத்தார். பேருந்தை துவக்கி வைக்க வந்த எம்.எல்.ஏ வைகைச்செல்வன் பேருந்தை ஓட்டவும் செய்தார். பின்னர் கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தார்.  முன்னதாக பேசிய எம்.எல்.ஏ. வைகைச்செல்வன்  நான் உங்களிடம் வாக்கு சேகரிக்கவரும்போது உங்களுக்கு ஊருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருவேன் என கூறியிருந்தேன்.  அதை நிறைவேற்றவே நான் இங்கு வந்துள்ளேன். தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலிலதா நிர்வாக திறமை கொண்டவர். கடந்த கால திமுக ஆட்சியில் 8 முதல் 10 மணி நேரம் மின்துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழக முதல்வர் புரட்சித்தலைவி பொறுப்பேற்ற 1 1/2 மாத காலத்தில் 8 மணி நேரம், 5 மணி நேரமாகி, 3 மணி நேரமாகி, 2 மணி நேரமாகி, வாரத்திற்கு 2 மணி நேரம் என மாறி விரைவில் மின்வெட்டே இல்லாத தமிழகமாக முன்னேறுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாக திறமையே காரணம் என தெரிவித்தார். இந்த பேருந்தை முழமையாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு இந்த போக்குவரத்து துறை மட்டுமல்ல பல்வேறு துறைகள் மூலம் குடிநீர், சுகாதாரம் என உங்கள் குறைகள் அனைத்தும் களையபடும் என பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.வுடன் மாவட்ட இளைஞர்,இளம்பெண் பாசறை இணை செயலாளர் டி.பி.எஸ்.வெங்கடேஷ், நகர செயலாளர் கண்ணன், மலைராஜன், கோகுல்   உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்