முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அரசியல்தான் தோல்விக்கு காரணம் என திமுககாரர்களே கூறுகிறார்களே- மு.க.அழகிரி வேதனை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.- 4 - குடும்ப அரசியல்தான் தோல்விக்கு காரணம் என திமுககாரர்களே கூறி வருகிறார்களே என மதுரையில் நடந்த திருமண விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வேதனையுடன் தெரிவித்தார்.   மதுரையில் திமுக மாநகர்மாவட்ட பொருளாளர் மிசா.பாண்டியன் இல்ல மணவிழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது, தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில் தான் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அதிகமாக வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. மாற்று கட்சியினர் கூறுவதை விட நம்முடைய கட்சிகாரர்களே குடும்ப அரசியல்தான் இந்த தோல்விக்கு காரணம் என பேசிவருகின்றனர். இது எனக்கு பெரும் மனவேதனையை தருகிறது. கட்சிகாரர்களுக்காக அதிகளவு உதவிகள் செய்துள்ளேன். இதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

   இனிமேல் திமுகவினர் நடத்தும் இல்ல விழாக்களில் அண்ணாபடமும், திமுக தலைவர்  படமும் மட்டுமே போட வேண்டும். உங்கள் மனதில் பிரியப்பட்டால் எனது படத்தை மட்டும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் எனது குடும்பத்தினர் படங்களையோ அல்லது அவர்களது பெயர்களையோ கண்டிப்பாக போடக்கூடாது. அவ்வாறு போட்டால் அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன்அந்த விழாக்களில் நான் கலந்து கொள்ளமாட்டேன். வரும் காலங்களில் திமுகவினர் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்