முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் 11 பேர் பலி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

கிகாலி,ஜூலை.- 4 - ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த சாலை விபத்தில் சீன நிறுவனத்தில் பணிபுரியும் 11 பேர் உயிரிழந்தனர். குரோரிரோ மாவட்டத்தில் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் சீன நிறுவனம் ஒன்றின் லாரி மணல் ஏற்றிக் கொண்டு தலைநகர் கிகாலிக்கு சென்றது. இந்த லாரியின் மேற்புறத்தில் இந்த நிறுவனத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர். சாலையின் ஓரத்தில் இருந்த மரம் ஒன்றில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இந்த 11 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அருகில் உள்ள மற்ற ஆப்பிரிக்க நாடுகளை காட்டிலும் ருவாண்டா தனது சாலை வசதிகளை சிறப்பாக பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்