முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முன்னாள் முதல்வர் மகன்கள் மீது வழக்கு தொடர சுப்ரீம்கோர்ட் அனுமதி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 5 - முறைகேடாக சொத்து குவித்த விவகாரம் தொடர்பாக அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா மகன்கள் 2 பேர் மீது வழக்கு தொடர சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அரியானா மாநில முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக்தளம் நிறுவனருமான ஓம் பிரகாஷ் செளதாலாவின் மகன்கள் அஜய், அபய் செளதாலா ஆகியோர்கள் முறைகேடாக சொத்து குவித்ததாக அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்துள்ளது. இதனையொட்டி விசாரணைக்கு ஆஜராகும்படி தனிநீதிமன்றம் அஜய் மற்றும் அபய் செளதாலா ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து டெல்லி டெல்லி ஐகோர்ட்டில் அவர்கள் இருவர் சார்பாக அப்பீல் செய்யப்பட்டது. எங்கள் மீது வழக்கு தொடர்ந்தபோது நாங்கள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தோம். எம்.எல்.ஏ.க்களாக இருக்கும்போது அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால் அனுமதி பெறாமலேயே சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது என்று அப்பீல் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். இதை டெல்லி ஐகோர்ட் நிராகரித்து வழக்கு தொடர அனுமதி அளித்தது. இதையும் எதிர்த்து அவர்கள் இருவரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ்.சர்புர்கார், டி.எஸ். தாகூர் ஆகியோர் டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு சரியே என்று தீர்ப்பு அளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்