முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலாகலமாக தொடங்கியது பூரி ஜகநாதர் ரத யாத்திரை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      ஆன்மிகம்

பூரி,ஜூலை.- 5 - ஒரிசா மாநிலம் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது.  பல நூற்றாண்டு காலமாக நடந்து வரும் இந்த ரத யாத்திரையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். புனித ரத யாத்திரை தொடங்கும் பாத தண்டா என்ற இடத்துக்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவியத் தொடங்கினர். யாத்திரையின் தொடக்கத்தில் மங்கள ஆரத்தி முதலான சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. பின் பல்வேறு வாத்திய முழக்கங்களுக்கு இடையே சிங்கவாயில் வழியாக கடவுளர்களின் திருவுருவங்கள் கொண்டு வரப்பட்டன.  45 அடி உயர நந்திகோஷ் என்ற தேரில் ஜகந்நாதர் திருவுருவமும், 44 அடி உயர தேரில் தலத்துவஜா என்ற பலராமர் திருவுருவமும், தர்பதலன் என்ற 43 அடி உயர தேரில் சுபத்திரையின் திருவுருவமும் வைக்கப்பட்டன. இந்த தேர்கள் பல வகை வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அருகில் இருக்கும் குண்டிசா என்ற ஆலயத்திற்கு கடவுளர்களின் திருவுருவங்கள் எடுத்து செல்லப்படுவது என்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சியாகும்.
பின்னர் கஜபதி அரச வம்சத்தை சேர்ந்த அரசர் திவ்யசிங்தேவ், கடவுளர்களின் வைக்கப்படும் மேடைகளை தங்க துடைப்பத்தால் பெருக்கும் சம்பிரதாயத்தை செய்தார்.மேலும் அவர் தேர்களுக்கு மலர்கள் தூவி புனித நீரை தெளித்து வழிபாடு நடத்தினார். இந்த ரத யாத்திரையை காண ஒரிசா ஆளுனர் பண்டாரி மற்றும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் வருகை தந்திருந்தனர். வெயிலின் வெப்பத்தை குறைக்க தன்னார்வ தொண்டர்கள் பக்தர்கள் மீது தண்ணீரை தெளித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தின் 134 வது ஆண்டு ரத யாத்திரையை மாநில முதல்வர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 14 கி.மீ. தூரம் நடக்கும் இந்த ரத யாத்திரையின் சில இடங்கள் வகுப்பு ரீதியாக பதட்டம் நிறைந்தவையாகும். விழாவுக்கு பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!