முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பணம் பதுக்கல்:விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு சுப்ரீம்கோர்ட்டு அதிரடி நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      ஊழல்

புதுடெல்லி,ஜூலை.- 5 - வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் குறித்து விசாரிக்க உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழுவை சுப்ரீம்கோர்ட்டு நியமித்துள்ளது. இந்த சிறப்பு குழுவுக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் துணைத்தலைவராக எம்.பி. ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவில் அரசியல்வாதிகளும் பெரும் தொழிலதிபர்களும் முறைகேடா சம்பாத்தியம் செய்ததாக கூறப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபாயை சுவிட்சர்லாந்து மொரீஷியஸ், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். வரியை கட்டாமல் ஏய்க்கவும் முறைகேடாக சம்பாத்தியம் செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும் என்பதாலும் வெளிநாடுகளில் அவர்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். புனே நகரை சேர்ந்த குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலி மட்டும்  30 ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் வெளிநாடுகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் 26 பேர் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தின் அளவு எவ்வளவு மற்றும் அந்த பணத்தை வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்பட அனைத்து விபரத்தையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சுப்ரீம்கோர்ட்டில் ஒரு பொது நலன் வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால் கறுப்புப்பண விபரத்தை வெளியிடக்கூடாது என்று இந்தியாவுக்கும்-சுவிட்சர்லாந்துக்கும் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது. தற்போது கறுப்பு பண விபரத்தையும் அந்த பணம் யாருடையது என்பதையும் வெளியிட்டால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று மத்திய அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட்டு கோடைகால விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் விசாரணையை தொடங்கியது. ராம் ஜெத் மலானி தொடர்ந்துள்ள வழக்கானது நேற்று நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் பெஞ்சானது கறுப்பு பண விவகாரத்தை விசாரிக்க நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையில் ஒரு உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார். இந்த குழுவின் துணைத்தலைவராக எம்.பி.ஷா நியமிக்கப்பட்டுள்ளார். ஜீவன் ரெட்டி, சுப்ரீம்கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியாவார். ஏற்கனவே கறுப்பு பணம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்ட குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவையும் ஜீவன் ரெட்டி தலைமையிலான குழுவுடன் இணைந்து செயல்பட சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கறுப்புப்பண விசாரணை தொடர்பாக யார் யாருக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ அவர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இதுவரை விசாரிக்கப்படாதவர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். சிறப்பு குழுவுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர சரிவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சுப்ரீம்கோர்ட்டு கண்டனமும் தெரிவித்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்