முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தர வரிசை: 6 வது இடத்தில் லட்சுமணன்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன்,ஜூலை.- 5 - சர்வதேச டெஸ்ட் தர வரிசையில் இந்திய வீரர் லட்சுமணன் 6 வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் தர வரிசையில் அவர் பிடித்த அதிகபட்ச உயரிய இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் குவித்ததன் மூலம் 13 வது இடத்தில் இருந்த லட்சுமணன் 7 இடங்கள் முன்னேறி 6 வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் விளையாடாததால் தர வரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் ஒரு இடம் பின்தங்கி 7 வது இடத்தில் உள்ளார். 

தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் தொடர்ந்து முதலிடத்திலும், சச்சின் 2 வது இடத்திலும், இலங்கை வீரர் சங்ககரா 3 வது இடத்திலும் உள்ளனர். இதே போல் 2 வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் இஷாந்த் சர்மா, பவுலர்கள் தர வரிசையில் 7 வது இடத்தை பிடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்ச தர வரிசை இதுதான். பவுலர்கள் தர வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஸ்வான் 2 வது இடத்திலும், ஆண்டர்சன் 3 வது இடத்திலும், இந்தியாவின் ஜாகீர்கான் 5 வது இடத்திலும், ஹர்பஜன்சிங் 8 வது இடத்திலும் உள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்