முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துயின்றி பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு தங்கபதக்கங்களை ஜெயலலிதா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 5 - தமிழக பதிவுத்துறை உயர் அலுவலர்களுக்கு சீருந்துகளும், விபத்துயின்றி பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு 4 கிராம் தங்க பதக்கத்தை வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று (4.7.2011) தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறை உயர் அலுவலர்களுக்கு சீருந்துகளும், பதிவுத் துறையில் ஓட்டுநர் பணியில் எவ்வித விபத்துமின்றி 20 ஆண்டுகள் சீரிய முறையில் பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் வழங்கினார். பதிவுத் துறையால் மேற்கொள்ளப்படும் பதிவுச் சேவையினை மேலும் சீரிய முறையில் பொது மக்களுக்கு அளிக்கும் வகையில் பதிவுத்துறையின் உயர்அலுவலர்கள், பதிவுத் துறையின் அடிப்படை அலகுகளான சார்பதிவாளர் அலுவலகங்களைக் கண்காணிப்பதுடன், பதிவுப் பணி தொடர்புடைய களப் பணி மற்றும் புலத்தணிக்கை ஆகியவற்றை விரைந்து பார்வையிட்டு, துரிதமாக பொது மக்களுக்கு தீர்வு அளித்திடும் வகையில், இத்துறையின் உயர் அலுவலர்களின் பயன்பாட்டிற்கு 24 சீருந்துகளின் சாவிகளை ஓட்டுநர்களிடம் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று வழங்கினார்.  அலுவலர்களின் பணித் தேவைகளை உணர்ந்து, வாகன நெரிசல் அதிகமாகவுள்ள இந்தக் காலகட்டத்தில் விபத்துகளின்றி சீரிய முறையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக சீருந்து ஓட்டுநர்கள் திருவாளர் டி. சின்னசாமி, எஸ். நமச்சிவாயம் ஆகிய இருவரின் பணியினை பாராட்டும் விதமாகவும், பிற சீருந்து ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் 4 கிராம் எடை உள்ள தங்கப்பதக்கத்தை ஓட்டுநர்களுக்கு  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்வின்போது,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத்சாரங்கி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறைத் தலைவர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்