முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன்பிக்சர்ஸ் சக்சேனா கைது-சிறை இன்று போலீஸ் காவலில் விசாரிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 5 - கலாநிதிமாறனில் சன்பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா சினிமா வினியோகதஸ்தரிடம் பணமேசடி செய்ததகாவும் , மிரட்டல் விடுத்ததாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்று கோர்டில் ஆஜர்படுத்தப்படும் சக்சேனா போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார் என தெரிகிறது. இது குறித்து விபரம் வருமாறு:​ சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜூலை 1-ம் தேதியன்று சேலத்தை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தான் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் திரைப்பட விநியோக தொழில் செய்து வருவதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் தன்னை அழைத்த சன் பிக்சர்ஸ் அதிராரி சக்சேனா, தன்னிடம் நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை தன்னை விநியோகிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியாதாக கூறியுள்ளார். ஏற்கனவே ஆர்.சி. ரெட்டி என்பவர் தயாரித்த படத்தை சன்பிக்சர்ஸ் வாங்கியுள்ளனர்.பின்பு அதே படத்தை விநியோகிக்க தன்னை நிர்பந்தித்ததாகவும் , தான் மறுத்த போது வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைத்ததாகவும் ரூ.1 கோடியே 25 லட்சத்துக்கு படத்தை வாங்கி தான் திரையிட்டதாகவும் கூறியுள்ளார். படம் நஷ்டமடையும் பட்சத்தில் பணத்தை திரும்ப தருவதாக கூறிய சக்சேனா தியேட்டரில் வசூலான பணத்தையும் பெற்று கொண்டதாவும், அதுபற்றி கேட்டபோது குறைவான தொகையை மட்டுமே திருப்பி தந்ததாகவும் கூறியுள்ளார்.
சுமார் 82 லட்சம் வரை தனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டபோது சன்டி.வி. அமைந்துள்ள பட்டிணப்பாக்கம்  அலுவலகத்துக்கு தன்னை மதியம் வரவழைத்து ஒரு அறையில் அடைத்து மிரட்டியதாகவும், பணத்தை திரும்பக் கேட்டக்கூடாது என்று நாள்புராவும் மிரட்டியதாகவும் , உயிர்பிழைக்க தான் கெஞ்சி கேட்டு ஓடி வந்து விட்டதாகவும், இதன் பேரில் சக்சேனா பேரில் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருந்தார்.
இதுபற்றி நடவடிக்கை எடுக்க அசோக்கநர் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுருந்தார்.  இதன்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர்,  இதனிடையே சக்சேனா ஜதாராபாத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்னை திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விமான நிலையம் சென்ற போலீசார் காரில்ஏறப்போன சக்சேனாவையும் கார் டிரைவரையும் வளைத்து பிடித்தனர்.  காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சக்சேனா அசோக்நகர் காவல்நிலையத்தில் விசாரித்து பின்பு இரவு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி திருமகள் வீட்டில் ஆஜர் படுத்தினர்.  சக்சேனா சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். போலீஸ் சக்சேனா மீது 406 (ஏமாற்றுதல்), 420 (மோசடி), 385 (மிரட்டுதல்), 506-2 (அச்சுறுத்துதல்) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குபதிவுசெய்துள்ளனர். இருதரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்ட்ரேட் திருமகள் சன்பிக்சர்ஸ் அதிகாரி சக்சேனாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று மதியம் சக்சேனாவை கோர்டில் ஆஜர்படுத்திய போலீசார் காவலில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று அவரை கோர்டில் ஆஜர்படுத்தவில்லை. இன்று கோர்டில் ஆஜர் படுத்தவுள்ளனர். அவரை காவலில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே  செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கில்  சக்சேனா மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலைவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்