முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு காவல் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூலை - 6 - பத்திரிகையாளர் ஜே.டே கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி வினோத் செம்பூரின் போலீஸ் காவலை இம்மாதம் 8 ம் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையில் இருந்து வெளிவரும் மிட்டே என்ற ஆங்கில பத்திரிகையின் புலனாய்வு நிருபரான ஜே.டே கடந்த மாதம் 11 ம் தேதியன்று தனது வீட்டு அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜனின் கூட்டாளியான வினோத் அஸ்ரானி என்கிற வினோத் செம்பூர் நேற்று மும்பையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வினோத் செம்பூரை மேலும் சில நாட்களுக்கு தங்களது காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து செம்பூரை வருகிற 8 ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜனைப் பற்றிய தகவல்களை அவனது எதிரியான சோட்டா ஷகீல் கும்பலுக்கு பத்திரிகையாளர் டே கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பத்திரிகையாளர் டேயை ஒழித்துக்கட்ட சோட்டா ராஜன் கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது. சோட்டாராஜனின் கட்டளைப்படி சத்தீஷ் காலியா என்பவன்தான் டேயை சுட்டுக் கொன்றுள்ளான். காலியாவுக்கு சோட்டா ராஜன் உத்தரவுப்படி ரூ. 5 லட்சத்தை வினோத் செம்பூர் கொடுத்திருக்கிறான். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட செம்பூர் நேற்று மும்பை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டான். அவனை வருகிற 8 ம் தேதிவரை போலீஸ்  காவலில் வைக்க மும்பை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. பத்திரிகையாளர் ஜே.டே வின் படுகொலைக்கு உண்மையான காரணம் என்பது குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் இன்னும் முடிவு செய்யவில்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்